கரூர்:
ருமான வரித்துறை சோதனை கூறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கரூர் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை கூறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கரூர் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்ய வந்தனர்.

வீடு பூட்டி இருந்ததால், அதிகாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த அசோக்கின் ஆதரவாளர்களுக்கும், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் அசோக்கின் ஆதரவாளரை சோதனை செய்ய வந்த அதிகாரி தாக்கியதாகவும் அதற்கு மனிப்பு கேட்ட வேண்டும் என்றும் திமுகவினர் மற்றும் அசோக் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் அப்போது ஆதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சோதனை செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் கரூர் எஸ்.பி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்புக்கு வரவில்லை. எங்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. கரூரில் வருமான வரித் துறையினர் சோதனை குறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. கார் கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் சம்ப இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். அதுமட்டுமல்லாமல் கரூர் மாவட்டத்தில் ஐ.டி சோதனை நடைபெறும் 9 இடங்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக சென்றுள்ளனர் என்று அவர் கூறினார்.