அண்ணா பல்கலைக்கழத்தில் தமிழ் வழி பாடப்பிரிவு மூடப்படுவதாக வெளியான செய்தியை அமைச்சர் பொன்முடி மறுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், “தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது” என அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.