சென்னை:
மிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரி கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.