பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் சமரசம் இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார்,
கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றும், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.