மிசோரம்:
மி
சோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று  பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மிசோரமில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

மிசோரம் மாநிலம் சாய்ரங் என்ற பகுதியில் புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்த கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் 40’க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக இந்த ரயில்வே பாலம் திடீரென இன்று காலை 10 மணிக்கு இடிந்து விழுந்ததுள்ளது. அப்போது பணியில் இருந்த 17 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது வரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த எதிர்பாராத விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமபத்திற்கு தலா 2 லட்ச நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.