டெல்லி: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வீடு உள்பட சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சட்டவிரோத பணப்பரிவர்த்தனை  வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரோனின் மகன் மற்றும் மற்றவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.  ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, தும்கா, தியோகர் மற்றும் கோடா மாவட்டங்களில் உள்ள சுமார் 34 வளாகங்களை மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் உள்ளடக்கி  சோதனை செய்து வருகின்றனர்.

அதுபோல, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்த 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு மாநிலங்களில் மதுபான விற்பனையில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.  இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.