2018ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மார்க். கம்யூ. கட்சி அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று கூடியது. இதில் வரும்  2018ம்  ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடந் கூட்டணி வைக்கக் கூடாது என கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான பிரகாஷ் காரத் எதிர்ப்பு தெரிவித்தார். இன்னொரு மூத்த தலைவரான சீத்தாரம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பேசினார்.

இப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மத்திய குழுவினரிடையே இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று வாக்களித்தனர்.

இதையடுத்து, வரும்  பாராளுமன்றத் தேர்தலில் காங். கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று மார்க். கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.