பிலாஸ்பூர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பதினொரு எம் எல் ஏக்கள் ஊதியம் பெரும் பதவிகள் வகிப்பதால் தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸார் பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டில்லி சட்டசபை உறுப்பினர்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.   அவர்கள் ஊதியம் பெரும் பதவிகள் வகிப்பதினால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துடை செய்துள்ளது.

அதே போல சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் சுமார் 11 பாஜக உறுப்பினர்கள் ஊதியம் தரும் பதவியில் உள்ளனர்.   அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் முகமது அக்பர் பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.    அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.   இதே மனுவை அக்பர் அம்மாநில ஆளுனர், தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கும் அளித்துள்ளார்.

தற்போது சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் பாஜகவுக்கு 49 உறுப்பினர்களும்,காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்களும் உள்ளனர்.   மொத்தம் உள்ள 90 உறுப்பினர்களில் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் 79 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள்.   அதே நேரத்தில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 38 ஆக குறையும் என்பதால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிய வருகிறது.