மும்பை:

பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு நீரவ் மோடி நன்கொடை கொடுத்துள்ளதாக பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கூறியுள்ளது.


மகாராஷ்ட்ரத்தில் சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் சிவசேனாவின் ‘சாம்னா’ நாளேட்டில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எழுதப்பட்டிருந்த கட்டுரை தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த கட்டுரையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி முறைகேடு செய்த நீரவ் மோடி, பாஜகவின் பங்காளி என்றும், பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு நன்கொடை கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்தியாவில் இருந்து தப்பியோடிய பின்னர்தான், நீரவ் மோடி முறைகேடு வெளியே தெரிந்தது.
அவர் தப்பியோடுவதற்கு சில வாரங்களுக்கு முன்புகூட, பிரதமர் மோடியுடன் உலக பொருளாதார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சொத்துகளை அதிகரிக்கவும், தேர்தலில் வெல்லவும், இதுபோன்ற நீரவ் மோடிக்கள் பாஜகவுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள்.

திருடவும் மாட்டேன், திருடவும் விடமாட்டேன் என்று பிரதமர் மோடி கோஷமிடுகிறார். அப்படியிருக்கும் போது, வங்கி மோசடி செய்து தப்பியோடிய நீரவ் மோடியுடன் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதை என்ன சொல்வது?

லல்லு பிரசாத் யாதவ், சகன் புஜ்பால் போன்ற அரசியல் தலைவர்கள் மீது ஊழல் வழக்கு போடுகிறார்கள். ஆனால், நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றோரை தப்பிக்க விடுகிறார்கள்.

100,500-க்காக விவசாயிகள் ற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால், பல கோடியை கொள்ளையடித்தவர்களை விட்டுவிடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.