டில்லி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணி புரியும் போயிங் 737 விமானிகல் 260 பேர் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன நேர்காணலில் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன விமானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தங்கள் ஊதிய பாக்கியை அளிக்கா விட்டால் ஏப்ரல் 1 முதல் பணி புரியப் போவதில்லை என விமானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தங்கள் ஊதிய பாக்கியை வாங்கி தர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் போயிங் 737 ரக விமானங்கள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நேர்காணல் ஒன்றை நடத்தியது. அதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் சுமர் 260 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். அவர்களில் 150 பேர் தலைமை விமானிகள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் போயிங் 737 ட்ச்ல்ச் விமானிகள் ஆவார்கள்.

போயிங் 737 விமானத்துக்கு முந்தைய மாடல் விமானிகளும் பெருமளவில் நேர்காணலில் கலந்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான போயிங் 737 ரக விமானங்கள் உலகளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே போயிங் 737 ரக விமானம் வாங்க கொடுக்கபட்ட ஆர்டர்களையும் பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. என்பத் குறிப்பிடததக்கது.