பெய்ஜிங்:

நீண்ட தூரம் பறக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற பெற்ற புறா  ரூ.10 கோடிக்கு ஏலம் போனது.
நம்பமுடிகிறதா? கீழே படித்தால் நம்பலாம்..


புறா பந்தயம் நடத்தும் பெல்ஜியம் நாட்டு இணையம் ஏலம் நடத்தி வருகிறது. அர்மான்டோ என்ற புறாவை வாங்குவதில் சீனாவைச் சேர்ந்த 2 தொழிலதிபர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

கடந்த மார்ச் 17-ம் தேதி நடந்த ஏலத்தில் ரூ.10 கோடிக்கு அர்மான்டோ என்ற புறா ஏலம் போனது.
மொத்தம் 178 புறாக்களும், அதன் குஞ்சுகளும் ரூ.17 கோடிக்கு ஏலம் போயின.

ரூ.10 கோடிக்கு ஏலம் போன அர்மான்டோவுக்கு 5 வயதாகிறது. அதன் பறக்கும் இலக்கும்,
வலுவான இறக்கையும் இன்றும் அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. இதுவே, இந்த புறா ஃபார்முலா 1-ல் உலக சாம்பியனாக வர காணமாக அமைந்திருக்கிறது.

ஒரு புறாவை ரூ.10 கோடி கொடுத்து வாங்குவது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சாம்பியன் பட்டம் பெற்ற புறாக்கள், இவ்வளவு விலைக்கு ஏலம் போவது மிக அபூர்வம் என்கின்றனர் ஏலம் விடுவோர்.

புறாக்களுக்கு சொந்தக்காரரான ஜோயல் வெர்ஷுட் கூறும்போது, “புறாக்களுடன் நான் தினமும் 12 மணி நேரம் செலவு செய்கின்றேன். இது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்காகிவிட்டது. புறாக்களின் விரைவாக பறக்கும் போட்டி நடக்கும் நாட்கள் பெருமைக்குரியவை” என்றார்.