மும்பை:

காஷ்மீர் மக்களுக்கு  நேர்த்தியான கல்வியை போதிப்பதன் மூலமே, வன்முறைகளுக்கு  தீர்வு காண முடியும் என்று பிரபல இந்திய நடிகர் சல்மான்கான் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தை கதைக்களமாக கொண்டு “நோட்புக்” என்ற படம் தயாரிக்கப்பட்டு வரு கிறது. இந்த படத்தில் சல்மான்கான் நடித்து வருகிறார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து படத்திற்கு  பாகிஸ்தான் தொழில்நுட்ப கலைஞர்களை பயன்படுத்தக்கூடாது என்று இந்தி திரையுலகம் தடை விதித்துள்ளது. அதைத்தொடர்ந்து நோட் புக் படத்தில்  அடிப் அஸ்லாம் என்பவர் பாடிய பாடலும் நிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநில பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள சல்மான்கான், அங்கு மக்களுக்கு  நேர்த்தியான கல்வியைப் போதிப்பதன் மூலமே,பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என கூறினார்.

நாட்டில், மன்னராட்சி முடிவுற்று, இந்தியாவோடு இணைந்து, நம் நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக மாறியபின், பாகிஸ்தான் நாட்டின் அட்டூழியத்தால், காஷ்மீர் பிரச்சினை  தொடர்ந்து வருகிறது என்று குற்றம் சாட்டியவர், அங்குள்ளவர்களுக்கு கல்வியை போதித்து, பிரச்சினைக்கு முடிவு கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.