சிறைகளில் செய்திகள் ஒளிபரப்பக்கூடாது: சிறை கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு

Must read

சென்னை:

மிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் செய்தி சேனல்களை ஒளிபரப்ப கூடாது என்று சிறை கண்காளிப்பாளர்களுக்கு சிறைத்துறை டிஐஜி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில், கைதிகளின் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த தொலைக்காட்சிகளில் இந்தி மொழியில் மட்டுமே நிகழ்ச்சிகள், செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந் திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு, கைதிகளின் மன உளைச்சலை குறைக்கும் வகையில், தமிழில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், செய்திகள் ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு சிறையில் தமிழ் மொழியில் செய்திகள்,  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரபப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தறபோது, அனைத்து சிறைகளிலும் செய்தி சேனல்களை ஒளிபரப்ப கூடாது  என்றும்,  செய்தி சேனல்களை தவிர மற்ற தமிழ் சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்குமாறு  அனைத்து சிறைத்துறை கண்காணிப்பாளர்களுக்கு தமிழக சிறைத்துறை டிஐஜி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

More articles

Latest article