பயணிகளுக்கு சலுகை: சென்னை மெட்ரோ ரயிலில் மாதாந்திர பாஸ் திட்டம் அறிமுகம்…

சென்னை:

யணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், சென்னை மெட்ரோ ரயிலில்  மாதாந்திர பாஸ் கட்டண வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலை பயணிகள் தொடர்ந்து உபயோகப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது மெட்ரோ ரயில் நிர்வாகம்.மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதால், பெரும்பாலான பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை விரும்பாமல் சாதாரண ரயில் சேவையையே நாடி வருகின்றனர். மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் பயணிகள் மெட்ரோ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சென்னையில் தற்போது 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு அதில் 35 கி.மீ. தூர பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் கட்டணம் குறைந்த பட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் கட்டணம் சாதாரண ரயில் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரோ ரயில் சேவையை உபயோகப்படுத்தவதை தவிர்த்து வந்தனர்.

 

அதைத்தொடர்ந்து கடந்த மாதம்  ஏற்கனவே இருந்த கட்டணத்தில்  இருந்து அதிகமாக பட்ச மாகரூ.10 வரை குறைத்து  மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக வாடகை சைக்கிள், வாடகை ஸ்ட்டர் மற்றும் வேன் வசதிகளும் ஏற்பாடு செய்து வருகிறது. விரைவில் வைபை வசதிகளும் ஏற்படுத்தப்படும் என அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தற்போது ரயில் பயணிகள் வசதி கருத்தில் கொண்டு மேலும் சில சலுகைகளை வழங்கி உள்ளது. சமீபத்தில் 150 ரூபாய்க்கு ஒருநாள் பயண அட்டையை அறிவித்த நிலையில், தற்போது,  2500 ரூபாய்கு மாதாந்திர பயண அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாதாந்திர பாஸ் வசதியை பெற  50 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். இந்த பயண அட்டை மூலம் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யலாம்.

இதை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai Metro Rail, cmrl, CMRLTamil nadu, monthly season pass
-=-