டில்லி

ன்று 15-18 வயதானோருக்கு  கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

கொரோனா மூன்றாம் அலை பரவல் நாடெங்கும் கடுமையாக உள்ளது.  இந்த அலையில் சிறார்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.  அதையொட்டி மத்திய அரசு உத்தரவுக்கிணங்க தற்போது 15/18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது..

இதற்கான புதிய வழிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.  இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலர் விகாஸ் ஷீல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதி உள்ளார்.

அவர் அந்த கடிதத்தில், “ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிறார்கள் 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது அது 01/01/223 அன்று 15 வயதை எட்டுபவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதியானவர்கள் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2005, 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் 01/01/2023 அன்று 15 வயது பூர்த்தி அடைவார்கள் என்பதால் இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இனி இவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.