“பிக்பாஸ்” நிகழ்ச்சி துவங்கியபோது, மக்களிடையே.. குறிப்பாக நெட்டிசன்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 15 பேரில் ஜூலி மட்டுமே திரைத்துறையைச் சாராதவராக இருந்தார்.

அவரை மற்ற சிலர்… குறிப்பாக காயத்ரி, ஆர்த்தி ஆகியோர் டார்ச்சர் செய்துவந்தனர். ஜூலி கலந்துகொண்ட,ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி எடக்கு மடக்கான கேள்விகளைக் கேட்டு வெறுப்பேற்றினர். பதில் சொல்ல முடியாமல் ஜூலி திணறினார்.

இதனால் ஜூலி மீது பார்வையாளர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது.  ஜூலிக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் எழுதிவந்தனர்.

அப்போது ஜூலிக்கு ஆதரவாக இருந்தவர் பரணி மட்டும்தான் “ அவங்க எல்லாம் என்னை கார்னர் பண்றாங்க” என்று ஜூலி அழுதபோது, “கவலைப்படாதே.. எல்லாரும் மனுசங்கதானே.. பதிலுக்கு நீயும் அவங்களை கார்னர் பண்ணு” என்று ஆறுதலாக பேசினார் ஜூலி.

ஒரு முறை, ஜூலியை சிநேகன், “கொன்னேபுடுவேன்..” என்று விளையாட்டாக சொல்ல, பரணி குறுக்கே பாய்ந்து, “இதே, நமீதாவை இப்படிச் சொல்வீர்களா” என்று சண்டைக்கு வந்தார்.

நெட்டிசன்களின் மீம்ஸ்

அப்படிப்பட்ட பரணியை ஒரு கட்டத்தில் எல்லோரும் கார்னர் செய்ய ஆரம்பித்தனர். பரணி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றார்கள். அவரை ஒதுக்கி வைத்தார்கள்.

அப்போது ஜூலியும் மற்றவர்களிடம் சேர்ந்துகொண்டு பரணியை புறக்கணித்தார். இது குறித்து வருத்தப்பட்டு பரணி கேட்டபோது, எடுத்தெறிந்து பேசி அதிர வைத்தார் ஜூலி.

அதோடு, பிக்பாஸ் வீட்டைவிட்டு பரணி வெளியேற சுவர் ஏறி குதிக்க முயன்றபோது மற்றவர்களப்போல ஜூலியும் வேடிக்கை பார்த்தார். கிண்டலாக சிரித்தார்.

அப்போதிலிருந்து ஜூலிக்கு நெட்டிசன்களிடையே எதிர்ப்பு உருவானது. “நன்றி இல்லாதவரராக இருக்கிறாரே ஜூலி” என்று ஆளாளுக்கு வசைபாடினர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். ஆனால் காயத்ரி தொடர்ந்து ஜூலியை கேலி கிண்டல் செய்துவந்தார். காயத்ரி சொல்லவதை எல்லாம் அடிமை போல செய்து வந்தார்.

இந்த நிலையில், ஜூலி தனக்கு வயிற்றில் வலிப்பதாகச் சொல்லி துடித்தார். ஆண்கள் எல்லோரும் பதற.. காயத்ரி, “சும்மா நடிக்கிறா ஜூலி” என்றார்.

இதனால் ஜூலி கதறி அழ, ஓவியாதான் ஆறுதல் கூறினார். ஜூலிக்கு பரிந்து மற்றவர்களிடம் பேசினார்.

இதற்கிடையே ஓவியாவை எல்லோரும் ஒதுக்கி வைக்க, ஜூலியும் ஓவியாவை பற்றி புறம் பேச ஆரம்பித்துவிட்டார். இது “வாடி, போடி” என வாய்த்தகராறு ஏற்படும் அளவுக்குப் போய்விட்டது.

இதனால் நெட்டிசன்கள், “ஜூலி ஒரு அடிமை.  ஆண்டைகளுடன் சேர்ந்துகொண்டு அப்பாவி ஓவியாவை எதிர்க்கிறார்”என்று ஜூலியை திட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து மீம்ஸ்களையும் போட்டு வருகிறார்கள்.

எப்படியோ… ஜூலி மற்றும் இதர ஆட்கள் மீது நெட்டிசன்களுக்கு ஏற்படும் வெறுப்பு ஓவியாவுக்கு ஆதரவான வாக்குகளாக மாறுகிறது!