பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஓவியாவுக்கு நாளுக்கு நாள் பார்வையாளர்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. ஒன்றரை கோடி ஓட்டுகள் அவருக்கு ஆதரவாக விழுந்ததும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில் திரையுலகிலும் ஓவியாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
“தென்மேற்கு பருவக்காற்று” , தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள டைரக்டர் சீனுராமாசமி, ஓவியாவை மிகவும் புகழ்ந்து ட்விட் செய்துள்ளார்.
அவர் தனது ஒரு ட்விட்டில், “ஒவியாவிற்கு தந்தை இல்லை தாயாருக்கோ புற்று நோய் என்று முன்பு என்னிடம் சொன்னார்,அவரும் இருக்காரான்னு தெரியாது,அவர் மனஉறுதி எனக்கு இன்ஸ்பிரேஷன்” என்றும், மற்றதில், “ஒரு படைப்பாளிக்கு பாரதி,தாகூர், கார்க்கி போன்ற படைப்பாளிகள்தான்
இன்ஸ்பிரேஷனா இருக்கனுமா.? சகமனுஷியும் இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம் டியுட் .கூல்” என்றும் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.