டில்லி

செண்டிரல் வியஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அகண்ட பாரதம் என்னும் சுவரோவியத்துக்கு நேபாள நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நேபாள நாடு புத்தர் பிறந்த கும்பினியைத் தனது கலாச்சார அடையாளமாகப் போற்றி வருகிறது.   சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம் பெற்றுள்ள அகண்ட பாரதம் என்னும் சுவரோவியத்தில் லும்பினி இந்தியாவில் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.  இதற்கு நேபாள நாட்டில்  கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முதன்முதலில் இந்த சுவரோவியத்தைத் தனது டிவிட்டரில் பகிர்ந்து அகண்ட பாரதம் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது அதுதான் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

“அண்மையில் இந்தியாவில் திறந்துவைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தில் அகண்ட பாரதம் சுவரோவியம் இடம் பெற்றுள்ளது. தேவையற்ற பிரச்சினைகளை இந்த சுவரோவியம் ஏற்படுத்துகிறது.   இந்த ஓவியம் தூதரக உறவுக்கு அபாயகரமானது.    ஏற்கனவே இந்தியாவுடனான பெரும்பாலான அண்டை நாடுகளுடனான உறவில் சிக்கல் நிலவும் சூழலில் இதுபோன்ற சுவரோவியம் மேலும் இத்தகைய உறவுச் சிக்கலை மோசமாக்கும். நேபாளத்துடனான உறவில் விரிசல் ஏற்படும்.

என்று தெரிவித்துள்ளார்.