வாஷிங்டன்

மீண்டும் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.

 

எலான் மஸ்க்  உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் அர்னால்ட் அவரைப் பின்னுக்குத் தள்ளினார்.  தற்போது சீனாவில் பொருளாதார மந்த நிலை அறிகுறியால் எல்விஎம்எச் பிராண்டு விற்பனை சரிவை எதிர்கொண்டது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்விஎம்எச் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்தது.  இதனால் அர்னால்டின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர் அளவுக்குச் சரிவடைந்ததையடுத்து அவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

தற்போது முதலிடத்துக்கு முன்னேறிய எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 55.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது.  பார்ச்சூன் பட்டியலில் 192.3 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், அர்னால்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.