சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அனுமதிக்கு அனுப்பபட்ட நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்ழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் பதில் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றபிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 13ந்தேதி நீட் தேர்வு விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்படி, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மசோதா அனுப்பப்பட்டு 100 நாட்களை கடந்த நிலையில், இன்னும் கவர்னர் மாளிகையில் இருந்து அனுமதி கொடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக

பொது கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ், நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து நவம்பர் 22ந்தேதி கவர்னர் மாளிகைக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து, கவர்னரின் உதவியாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் கடிதம் எழுப்பி உள்ளார். அதில், நீட் விலக்கு மசோதா தொடர்பான பைல் கவர்னர் ஆர்.என்.ரவியின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  இந்த பதிலில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், கவர்னர் மாளிகை துணைச்செயலாளருக்கு ஒரு மாதத்திற்குள் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.