டெல்லி: தமிழ்நாடு அரசு ‘நீட்’ தேர்வில் விலக்கு கேட்டு சீட்டத்திருத்தம் செய்துள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசுகின்றனர்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில், தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் தலைநகர் டெல்லியில் இன்று  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் இன்று சந்தித்து பேசுகின்றனர். இந்த குழுவில்,  . திமுக, அதிமுக, இடதுசாரி, விசிக உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக ஏராளமான மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதை எடுத்துக்காட்டியும், நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களையும் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு  விலக்கு கோருகின்றனர்.