சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு தீர்மானம் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவையை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஒத்தி வைத்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் கடந்த ஆண்டு நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பிய நிலையில், இன்று மீண்டும் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக,  நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சுமார் 3மணி நேரம் நடைபெற்ற இன்றைய தொடர் பகல் 1மணிக்கு நிறைவடைந்தது.  இன்றைய அவை கூட்டம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் நீட் விலக்கு தொடர்பான தீர்மானத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது கருத்தை பதிவு செய்தனர். இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மசோதா குறித்து பேசியதுடன், அது தொடர்பான நீண்ட விளக்கத்தை அளித்தார்

தொடர்ந்து நீட் மசோதா குறித்து, சபாநாயகர் அப்பாவு வாக்கெடுப்பு நடத்தினார். நீட் விலக்கு மசோதாவுக்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் அனைத்து கட்சியினரும் ஆம் என்று கூறி தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.

இதையடுத்து நீட் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதையடுதுது அவை முன்னவர் துரைமுருகன், அவையை ஒத்தி வைப்பது தொடர்பாக முன்மொழிந்தார். இதற்கு பிறகு, சபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இன்றைய சிறப்பு சட்டப்பேரவை அமர்வு சரியாக 3மணி நேரம் நடைபெற்றது. காலை 10 மணி தொடங்கி மதியம் 1மணிக்கு நிறைவடைந்தது.

முன்னதான நீட் விலக்கு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.