டெல்லி: நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான  ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு  வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதியும்,  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 12 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.  இந்த தேர்வானது தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 198 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வு, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தகவலின்படி,  நீட்  தேர்வு எழுதக் கூடிய நபர்கள் தங்கள் தேர்வு மையம் குறித்த தகவல்களை https://neet.nta.nic.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://neet.nta.nic.in எனும் இணையதளத்திலும்,

செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை nbe.edu.in எனும் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.