பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையேற்றத்துக்கு முந்தைய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் உத்தரவாத பத்திரங்களே காரணம் என்று மத்திய அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்பது தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட பதிலில் இருந்து தெரிகிறது.

சாகேத் கோகலே என்ற சமூக ஆர்வலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கடந்த 2015-16 நிதி ஆண்டு முதல் எண்ணெய் நிறுவனங்களுக்கான கடன் எதையும் திருப்பி தரவில்லை என்று கூறியிருக்கிறது.

முந்தைய அரசு வாங்கி வைத்துச் சென்ற கடனுக்கெல்லாம் ஜவாப்தாரியாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால் எல்லா சுமையும் என் தலைமேல் விழுந்திருக்கிறது அதனால் பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்கு குறைக்க வழியில்லை என்ற தொனியில் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

அவர் இவ்வாறு கூறிய நிலையில், மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட திருப்பி அளிக்கவில்லை என்ற தகவல் வெளியானதால், மத்திய அரசு தனக்கு கிடைக்கும் வருவாயை என்ன செய்கிறது என்று சாகேத் கோகலே கேள்வியெழுப்பியுள்ளார்.