மன்மத லீலை படத்தை தொடர்ந்து நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

நாக சைதன்யா நடிக்கும் 22 வது படம் என்பதால் #NC22 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது.

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகிறது.

நாக சைதன்யாவுக்கு இது தமிழில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.