பீஸ்ட் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜயுடன் நடிக்க தேர்வான அறிவிப்பு அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

தெலுங்கு, தமிழ் மட்டுமன்றி இந்திய திரைப்பட ரசிகர்களின் க்ரஷ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க இருப்பதாக வெளியான அறிவிப்பால் ரசிகர்களிடையே உற்சாகம் கரைபுரள்கிறது.