மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லன் நடிகராக மாறியவர் வினய்.

சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்தவர் வினய்.

2007 ம் ஆண்டு உன்னாலே உன்னாலே திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான வினய், ஜெயம்கொண்டான், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் விமலா ராமனுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார் வினய்.

2006 ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விமலா ராமன்.

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவரான விமலா ராமன் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ள விமலா ராமன் அவ்வப்போது வினையுடன் மொரிசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதோடு அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.

இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இருந்தபோதும் இவர்கள் இருவரும் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.