வம்சி படிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்தப் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார்.

தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

படத்தின் மற்ற நடிகர் நடிகையர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

கதை மற்றும் திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். படத்தொகுப்பு கே.எல்.பிரவீன் ஒளிப்பதிவு கார்த்திக் பழனி.

ஆடை வடிவமைப்பாளராக தீபாலி நூர் பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாகவும், சுனில் பாபு மற்றும் வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்களாகவும் உள்ளனர்.

மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் தெரியவரும்.