ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்குனராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் . கன்னியாகுமரியில் உள்ள அம்மனை, மூக்குத்தி அம்மன் என்று அழைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். முழுக்கதையும் அவர்மீது பயணிப்பது போலத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நயன்தாராவுடன் ஆர்.ஜே. பாலாஜி, மெளலி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர் .

இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்ற நயன்தாரா அங்கு சாமி தரிசனம் செய்தார்.