ஏற்கனவே அச்சிடப்பட்டு தேங்கிக் கிடக்கும் 30 கோடி எண்ணிக்கையிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தாள்களை என்ன செய்வது? என்று ரிசர்வ் வங்கியிடம் நாசிக் அச்சகம் கேள்வி கேட்டுள்ளது.

currency_1000

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகத்தின் ஒன்பது கிளைகளில் ஒன்றான நாசிக் அச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “இரு மாதங்களுக்கு மும்புதான் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிட வேண்டாம் என்ற மத்திய அரசின் உத்தரவு எங்களுக்கு கிடைத்தது. ஆனால் எங்களுக்கு அந்த நோட்டுக்கள் செல்லாதவைகளாக அறிவிக்கப்படப் போகின்ற விஷயம் தெரியாது. இப்போது 30 கோடி எண்ணிக்கையிலான பழைய 1000 மற்றும் 500 நோட்டுத்தாள்கள் இங்கு தேங்கிக் கிடக்கிறது. தீபாவளிக்கு சில நாஅட்கள் முன்புதான் புதிய 500 ரூபாய் நோட்டின் டிசைன் எங்களுக்கு கிடைத்தது. தேங்கிக் கிடக்கும் செலாத பழைய நோட்டுக்களுக்கு எங்களுக்கு ரிசர்வ் வங்கி இழப்பீடு செய்ய வேண்டும் என்று நாசிக் அச்சகம் கோரியுள்ளது.
நாசிக் அச்சகம் கடந்த 10 நாட்களாக புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 35 லட்சம் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுவிட்டன. இன்னும் இரு நாட்களில் 50 லட்சம் நோட்டுக்கள் அச்சிடப்பட்டுவிடும். இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகத்தின் தேவாஸ் கிளை (மத்திய பிரதேசம்) ஏற்கனவே 50 லட்சம் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவிட்டது. அடுத்த 50 லட்சம் நோட்டுக்களை அச்சிடும் பணி அங்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
நாசிக்கில் மட்டும் மொத்தம் 2 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. மைசூர் மற்றும் மேற்கு வங்கத்தின் சல்போனி ஆகிய அச்சகங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது.