டில்லி,
த்தியஅரசின் ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து, மேற்குவங்க முதல்வர் தலைமையில்  அனைத்து கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை  ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார்.
மத்தியஅரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு வரவேற்பும் கண்டனமும் வந்துகொண்டே உள்ளன. இதன் காரணமாக பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டு மாற்றுவதற்கு பொதுமக்கள் வங்கிகளில் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
mamtha-banaji
.இதன் காரணமாக பொது மக்கள் கடந்த ஒருவாரமாக கடும் அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள்.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளடன் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியும்  கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜனாதிபதியை அனைத்து கட்சி தலைவர்களுடன் சேர்ந்து  சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டிருந்தார். ஜனாதிபதி மாளிகை நேரம் ஒதுக்கியதை தொடர்ந்து,  இதுகுறித்து ஆலோசிக்க நேற்று மாலை டில்லி வந்தடைந்தார் மம்தா.
தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்றைய ஜனாதிபதியை சந்திக்க செல்லும் மம்தாவுடன், சிவசேனாவும், தேசிய மாநாட்டுக் கட்சியும் ஜனாதிபதியை சந்திக்க வருவதாக விருப்பம் தெரிவித்தது.
மம்தா பானர்ஜி தலைமையில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா, தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பேரணி ஜனாதிபதி மாளிகையை நோட்கி சென்றது. பேரணியின் முடிவில் ஜனாதிபதியை சந்தித்து, மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற  உத்தரவை திரும்ப பெறக்கோரி மனு கொடுத்தனர்.