தனது மகளின் திருமண ஏற்ப்பாட்டுக்காக வங்கியில் பணம் எடுக்கச் சென்ற 70 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் 8 மணிநேரம் காத்துக்கிடந்தும் பணம் எடுக்க முடியாமல் வரிசையில் நின்று கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

bank_dead

உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்க காத்துக்கொன்று நின்ற 70 வயது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான ரகுநாத் வர்மா மகளின் திருமணத்தைக்கு முந்தைய நிச்சயதார்த்த விழாவை நவம்பர் 16-ஆம் தேதி ஏற்ப்பாடு செய்திருந்தார். அதற்கு தேவையான பணத்தை வங்கியிலிருந்து எடுக்க வேண்டிய சூழலில் அவர் வங்கிக்கு சென்று வரிசையில் நின்றும் இரண்டு மூன்று நாட்களாக அவரால் பணம் எடுக்க இயலவில்லை. சம்பவத்தன்று அவர் வங்கிக்கு சென்றபோதும் அவருக்கு முன்னால் அங்கு 1000 பேருக்கும் அதிகமானோர் காத்துக்கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள்.
மகளின் திருமணத்துக்கு தனக்கு ரூ.2 லட்சம் தேவை எனவே தனக்கு உடனடியாக கொடுத்து உதவும்படி வங்கியின் மேனேஜர் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். யாரும் அவருக்கு உதவ முன்வராததையொட்டி வரிசையில் வந்து நின்றவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
மதோகர் வட்ட அதிகாரி நவீன் குமார், ரகுநாத் வர்மா வங்கி வரிசையில் நின்ற போதுதான் மாரடைப்பு வந்து இறந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது தந்தை வங்கியில் பணம் எடுக்க முடியாததால் கடந்த மூன்று நாட்களாக மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும். பணத்தை செல்லாது என்று அறிவித்து மக்களை படு சிரமத்துக்குள்ளாக்கிய அரசின் இந்த நடவடிக்கையால் நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்து விட்டோம், சகோதரியின் திருமணமும் கேள்விக்குறியாகிவிட்டது என்று மரணமடைந்த பெரியவர் ரகுநாத் வர்மாவின் மகன் தெரிவித்துள்ளார்.