சென்னை:
மிழகத்தில் ‘நான் முதல்வன்’ என்கிற திட்டத்தின் கீழ் ரயில்வே, எஸ்எஸ்சி மற்றும் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக வழங்குவது குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட தொழில்நுட்ப படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கும் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றிய அரசின் ரயில்வே பணியாளர் தேர்வு, வங்கி தேர்வு, இந்திய குடிமைப்பணி தேர்வு ஆகிய போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், இதில் முதற்கட்டமாக ரயில்வே, எஸ்எஸ்சி மற்றும் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 150 மாணவர்களுக்கு நேரடி வகுப்பின் மூலமாக இலவச பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கான புத்தகச் செலவினையும் அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, ரயில்வே, எஸ்எஸ்சி, வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் http://candidate.tnskill.tn.gov.in/CE -NM/TNSDC_REGISTRATION.ASPX என்கிற இணையதள பக்க முகவரியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இலவச பயிற்சி வகுப்பு தொடர்பான முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்கிற இணையதள முகவரியின் மூலமாக அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.