சென்னை: காங்கிரஸின் அறிக்கையானது வேலை, செல்வம் மற்றும் நலன் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது/  காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான  ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மத்தியில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி வருகிறது. அதேவேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மோடி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு  நிவாரணம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான ப.சிதம்பரம், தனது எக்ஸ் தளத்தில், பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது பதிவில்,

இது தரவுகள் மற்றும் UNDP தயாரித்த அறிக்கையின் படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது.  ஆனால்,  திரு ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்கள் NDA 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதாக கூறுகின்றனர். இதற்கான தரவு  யாரிடம் தரவு உள்ளது மற்றும் யார்  இந்த  அறிக்கையை உருவாக்கியது? அரசாங்கத்தின் செல்லப்பிள்ளை அமைப்பான NITI ஆயோக்? இதை தயாரித்ததா என கேள்வி எழுப்பி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பேசிய மாண்புமிகு பிரதமர், நாட்டின் வளங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் ஏழைகளுக்கு முதல் உரிமை உள்ளது என்றார். பிரதமர் மன்மோகன் சிங் 2006 நவம்பரில் தேசிய வளர்ச்சி கவுன்சிலில் ஆற்றிய உரையிலும் இதையே கூறினார் அந்த பட்டியலில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை டாக்டர் மன்மோகன் சிங் சேர்த்துள்ளார்

மாண்புமிகு நரேந்திர மோடி ஏன் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மறந்துவிட்டார்?

ஏழை சிறுபான்மையினர், ஏழை பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகள் இல்லையா?

தேசத்தின் வளங்களில் ஏழைகள் முதல் உரிமை கோருவதுதான் சரியான உருவாக்கம்.

நாட்டில் வளர்ச்சி அடைந்தாலும் கணிசமான எண்ணிக்கையில் ஏழைகள் இருப்பதை காங்கிரஸ் அங்கீகரிக்கிறது. எனவே, ‘ஏழைகளுக்கான முன்னிலை’. காங்கிரஸின் அறிக்கை ஏழைகளை உயர்த்தும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள ஆபத்தான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் கொள்கைகளைக் கொண்டுள்ளது.

தேசத்தின் வளங்களின் மீது ஏழைகளுக்கு முதல் உரிமை உண்டு என்பது தான் சரியான உருவாக்கம்  என குறிப்பிட்டுள்ளதுடன்,  நாடு வளர்ச்சி அடைந்தாலும் கணிசமான எண்ணிக்கையில் ஏழைகள் இருப்பதை காங்கிரஸ் உணர்ந்திருப்பதால் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு முக்கியத்துவம் இருப்பதாக கூறியதுடன்,  ஏழைகளை உயர்த்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்தியாவில் உள்ள ஆபத்தான ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், கொள்கைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும்

காங்கிரஸின் அறிக்கையானது வேலை, செல்வம் மற்றும் நலன் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, மக்களின் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தியதோடு, நாட்டின் கோடிக்கணக்கான மக்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.