கமத்பூர்

த்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமியப் பெண்ணை அவரது மைத்துனர் சரமாரியாகத் தாக்கி உள்ளார்.

நடந்து முடிந்த மத்தியப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றிபெற்ற பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக தொண்டர்கள் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதை ள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

சிஹொரி மாவட்டம் அகமத்பூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் சமினா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் ஆவார்,  இவர் பாஜக ஆதரவாளர் என்பதால் சமினா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்.

தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து அந்த வெற்றியை சமினா கொண்டாடியுள்ளார். சமினா பாஜகவுக்கு வாக்களித்ததையும், அக்கட்சி வெற்றிபெற்றதை அவர் கொண்டாடியதையும் சமினாவின் மைத்துனன் ஜாவித் கான் விரும்பவில்லை.

சமினாவை ஜாவித் கான் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். தம்மைத் திட்டியது குறித்துக் கேட்டபோது சமினாவை ஜாவித் கான் சரமாரியாக தாக்கியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக இனி வாக்களித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சமினாவை எச்சரித்துள்ளார்.

சமினா தாம் பாஜகவுக்கு வாக்களித்ததால் தன்னை சரமாரியாக தாக்கிய மைத்துனன் ஜாவித் கான் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.