மும்பை

ரு மருத்துவர் சமோசாவுக்கு ஆர்டர் செய்த போது அவரிடம் ரூ.1.40 கட்சன் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த 27 வயது மருத்துவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு முன்னர் அனைவருக்கும் சமோசா வாங்க நினைத்தார். எனவே மருத்துவர் சியான் பகுதியில் உள்ள பிரபல குருகிருபா ஓட்டலுக்கு போன் செய்து 25 சமோசா ஆர்டர் செய்தார்.

தொலைப்பேசியில் எதிர்முனையில் பேசியவர், சமோசாவுக்காக ரூ.1,500 அனுப்பக் கூறி, அதற்கான இணைப்பை மருத்துவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.  அந்த இணைப்பில்  மருத்துவர் பணம் அனுப்பினார்.

ஆயினும் ஓட்டல் சார்பில் பேசியவர், “எங்கள் கணக்கில் பணம் வரவில்லை. நான் இப்போது உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்புகிறேன். அதை நான் அனுப்பும் இணைப்பில் டைப் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதன்படி மருத்துவரும் செய்துள்ளார். மறுநிமிடமே மருத்துவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.28,000 பணம் எடுக்கப்பட்டது. மேலும் சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து மொத்தம் ரூ.1.40 லட்சம் திருடப்பட்டது. மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில் சைபர் மோசடி குழுவினர், கூகுளில் குருகிருபா ஓட்டலின் தொலைபேசி நம்பரை மாற்றி தங்கள் நம்பரை பதிவிட்டுள்ளனர் எனவும் இதனால், கூகுள் மூலம் அந்த ஓட்டல் தொடர்பு எண்ணை யார் தேடினாலும், அவர்களுக்கு சைபர் மோசடி குழுவின் மொபைல் நம்பர் வந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும். இதைப் பயன்படுத்தி அவர்கள் பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது. அந்த கும்பலைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர