சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அரசு தண்ணீர் திறந்துவிட்டவிவகாரம் சர்ச்சையான நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் படகில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகம், கேரளா உள்பட பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலுங்ம  பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 1,644 ஏரிகளில்,  256 ஏரிகள் 100%  நிரம்பியுள்ளதாகவும், 205 ஏரிகள், 75 முதல் 99 சதவீதம் வரை நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள  நிலையில், அணையின் நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், கேரள அரசு தண்ணீரை திறந்துவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீதும், கேரள அரசு மீதும் எதிர்க்கட்சிகள் கடுமையான சாடியிருந்தன.

இந்த நிலையில், முல்லை பெரியாறு அணை, பேபி அணை போன்றவற்றை தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் உள்பட உயர் அதிகாரிகள் படகில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.