அடிக்கடி அழுத குழந்தை – உதடுகளை பசையால் ஒட்டவைத்த தாய்..!

Must read

சாப்ரா: தன் குழந்தை அடிக்கடி அழுதுகொண்டே இருந்ததால், காரணம் கண்டுபிடிக்க முடியாமல் கோபமான தாய், குழந்தையின் 2 உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய குழந்தையின் தந்தை, குழந்தை ஏன் அமைதியாக இருக்கிறது என்று பார்க்கையில், குழந்தையின் வாயில் நுரை வந்துகொண்டிருந்தது.

உடனே, மனைவியிடம் காரணம் கேட்க, உண்மை தெரியவந்துள்ளது. அடித்துப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் குழந்தையை. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அந்தக் குழந்த‍ையின் தந்தை இன்னும் தாமதாக வீட்டிற்கு வந்து குழந்தையை கவனித்திருந்தால்…?

– மதுரை மாயாண்டி

More articles

Latest article