புதுடெல்லி: கடந்த மே மாதம் 6ம் தேதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ‘வந்தே பாரத்’ போன்ற முயற்சிகளின் மூலமாக, இதுவரை வெளிநாடுகளில் தவித்துவந்த 8,14,000 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
அவர் கூறியுள்ளதாவது, “மத்திய அரசின் பல்வேறுகட்ட முயற்சிகளின் அடிப்படையில், மொத்தம் 2,70,000 பேர், 53 நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் ஐந்தாம் கட்ட நடவடிக்கைகள் துவங்கவுள்ளன. இந்தக் கட்ட நடவடிக்கையில் அமெரிக்கா, கனடா, கத்தார், ஓமன், யுஏஇ, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், செளதி அரேபியா, பஹ்ரைன், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் மீட்டுக் கொண்டுவரப்படுவார்கள்” என்றுள்ளார் அமைச்சர்.