புதுடெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.1.30 லட்சம் கோடிகள் கடன் ஒப்புதலை வங்கிகள் வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, 100% அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்கி அறிவித்திருந்தது. இதுவரை, ரூ.1.30 லட்சம் கோடி அளவிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. ரூ.82 ஆயிரத்து 65 கோடி அளவிற்கு பயனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
இதில், பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.71 ஆயிரத்து 818 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.47 ஆயிரத்து 631 கோடி வழங்கப்பட்டு விட்டது. தனியார் துறை வங்கிகள் ரூ.58 ஆயிரத்து 673 கோடிக்கு ஒப்புதல் வழங்கி, ரூ.34 ஆயிரத்து 433 கோடியை நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளன.
எஸ்பிஐ வங்கி மட்டும் ரூ.21 ஆயிரத்து 27 கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கி, ரூ.15 ஆயிரத்து 112 கோடியைக் கொடுத்துள்ளது.