பாதுகாப்பின்மை – ஆஃப்கனிலிருந்து இந்தியா திரும்பிய 11 சிறுபான்மையினர்!

Must read


புதுடெல்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து இந்து மற்றும் சீக்கிய சமூகங்களைச் சேர்ந்த சுமார் 11 பேர் இன்று இந்தியா வந்தடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத சூழல் பல்லாண்டுகளாகவே நிலவி வருகிறது.
இந்நிலையில், நிடான் சிங் என்பவர் ஆப்கானிஸ்தானில் கடத்திச் செல்லப்பட்டார். அதன்பிறகு, ஜூலை 18ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.
தற்போது இந்தியாவிற்கு திரும்பியுள்ள 11 பேர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் விசா உள்ளிட்ட தேவையான வசதிகளை இந்திய அரசாங்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மத அடிப்படையில் அமையப்பெற்ற பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மையினரை துன்புறுத்துவது பல்லாண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

More articles

Latest article