ட்விட் குளறுபடியில் மீண்டும் சிக்கிய மோடி!

Must read

 
 டில்லி:
மோடியின் பேச்சு அல்லது ட்விட்டுகள் பரபரப்பாக பேசப்படுவதும்,  பிறகு அந்தத் தகவல் தவறு என்று செய்தி வெளியாவதும் புதிதல்ல. சமீபத்தில் அப்படி ஒன்று.
ஆகஸ்டு 15 அன்று பேசிய சுதந்திரதின உரை பற்றிய டிவீட்டால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மோடி தனது சுதந்திர தின உரையில் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சியில்
18 ஆயிரம்  கிராமங்கள் மின்சாரமின்றி இருந்தன, அதில்  10 ஆயிரம் கிராமங்களுக்கு தமது ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளதாக  கூறினார். மேலும் டெல்லிக்கு அருகாமையிலிருக்கும் நாகா படேலா என்ற கிராமம், 70 ஆண்டுகள் மின்சார வசதியின்றி இருந்தது..  ஆனால் இன்றைக்கு அங்கே மின்சாரம் வழங்கப்பட்டு, அந்த கிராம மக்கள் எனது சுதந்திர தின உரையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
அதற்கு ஆதாரமாக  புகைப்படம் ஒன்றையும்  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
modi-tweet-1_081916104259
மோடியின் பேச்சு மற்றும் டிவீட்டின்  உண்மைநிலையை அறிய ஊடகங்கள்  கிரைமத்தை நோக்கி படையெடுத்து சென்றன.  ஆனால் அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள மக்களை விசாரித்தபோது,   மொத்தமுள்ள 600 வீடுகளில்  450 வீடுகளுக்கு மின்சாரமில்லை‘ என்பதும்,  மீதமுள்ள 150 வீடுகளிலும்கூட அனுமதி பெறாமலே மின்சார இணைப்பு பெற்று பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.
இந்த செய்தி மீடியாக்களில் பரபரப்பாக வந்தவுடன், பிரதமர் மோடி தான் வெளியிட்டிருந்த பதிவையும், போட்டோவையும் நீக்கி விட்டார்.
goyal
ஆனால், மோடியின் டிவிட்டில், அவருக்கு ஆதரவாக மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல்  பின்னூட்டம் இட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article