பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது. அதே போல அவரது கோச், புல்லேலா கோபிசந்தும் கொண்டாடப்படுகிறார்.
பாடமிண்டன் வீரரான கோபிசந்த், ஒரு கட்டத்தில் இனி அவ்விளையாட்டை விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், உடல் நிலை. ஆனாலும் அவர் துவண்டுவிடவில்லை.
பாட்மிண்டன் விளையாட்டின் மீதான காதலால்,  பயிற்சி மையம் (அகடமி) துவக்க  முனைந்தார் கோபிசந்த்.  அதற்கு, சுமார் 1. 75 கோடி ரூபாய் பணம் தேவைப்பட்டது, அந்த அளவு பணம் அவரிடம் இல்லை. மனம் துவண்டார்.

சிந்துவுக்கு பயிற்சி அளிக்கும் கோபிசந்த்
சிந்துவுக்கு பயிற்சி அளிக்கும் கோபிசந்த்

அந்த நேரத்தில், கோக், விளம்பரத்தில் நடித்தால், அதிகம் பணம்  தருகிறோம் என்று அந்நிறவனம், கோபிசந்தை அணுகியது. ஆனால், “ கோகோ கோலா பானம் பலரின் உடலை நாசம் செய்கிறது. இளைஞர்களின் உடலை சீரழிக்கும் அந்த பாணத்தின் விளம்பரத்தில் எந்த சூழ்நிலையிலும்  நடிக்க மாட்டேன்” என்று மறுத்தார் கோபிசந்த்..
அந்த நேரத்தில், இவரின் நண்பரும் உறவினருமான மாட்ரிக்ஸ் லேப்ஸ் பிரசாத், பண உதவு செய்ய முன்வந்தார்.  அன்றைய ஆந்திர அரசும், 45 வருட லீசுக்கு, இடத்தை அளித்தது.
கோபிசந்தின்  மனைவி ஒலிம்பியன் பிவிவி லஷ்மியும், பெரும் துணையாக இருக்க… பாட்மிண்டன் அகடமியை துவக்கினார்.
வீரர்கள் தங்குமிடம், , காஃபடீரியா, ஸ்விம்மிங் பூல், சர்வதேச ஆடுதளம் என்று  சிறப்பான அகடமியை ஆந்திராவில் துவக்கினார்.  இங்கு ஒரே நேரத்தில்..60 பேருக்கு பயிற்சி அளிக்கலாம்.  அரசும் ஒரு நாள் பயிற்சிக்கு 20 $ தருகிறது.
இங்குதான் உருவானார் வெள்ளி வென்ற, தங்க மங்கை சிந்து.
பலகோடி ரூபாய் விளையாட்டில் சம்பாதித்தாலும், கோக் போன்ற பானங்களின் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில்  அதை மறுத்த கோபிசந்த் மாமனிதர்தான்.
கூடுதல் தகவல்:
கடந்த மூன்று மாதங்களாக சிந்து செல்போன் பயன்படுத்தவும், ஐஸ்க்ரீம் சாப்பிடவும் தடை விதித்தாராம் கோபிசந்த். “ செல்போன் மூளையை சிதறடிக்கும், ஐஸ்கிரீம் உடலைக் கெடுக்கும்” என்பாராம் கோபிசந்த். இப்போது சிந்து வெள்ளி வென்றதை அடுத்து, “செல்போன் பயன்படுத்தவும், ஐஸ்க்ரீம் சாப்பிடவும் சிந்துவை அனுமதிக்கப்போகிறேன்” என்கிறார் கோபிசந்த்.