சென்னை:
சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளவுக்கு செப்டம்பர் மாதம் 2ந் தேதி சிறப்பு ரெயில்களை இயக்குகிறது தென்னக ரெயில்வே.
இதுகுறித்து  ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செப்டம்பர் 2ந்தேதி
சென்னை எழும்பூர் -திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82601: செப்டம்பர் 2ஆம் தேதி, சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 82602: செப்டம்பர் 5ஆம் தேதி, திருநெல்வேலியில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
train1
சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82621: செப்டம்பர் 2ஆம் தேதி, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
ரயில் எண் 82622: செப்டம்பர் 5ஆம் தேதி, எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது