சென்னை: மநீம கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் உள்படமுக்கிய நிர்வாகிகள் விலகி உள்ளனர். கட்சியை விட்டு விலகிய மகேந்திரன், கமல்ஹாசனை சிலர் தவறான வழிநடத்துகிறார்கள்ற என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும். தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தலை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி என கூறியுள்ளார்.

இதுபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆகிய சிகே குமரவேல், தங்கவேல், மௌரியா ஐஏஎஸ், உமாதேவி, சேகர், சுரேஷ் ஐயர், எம் முருகானந்தம் ஆகியோர் தங்கள்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மற்றொரு துணைத் தலைவர் பொன்ராஜ், கட்சியை சீரமைப்பதற்கான முழு அதிகாரத்தையும், அனைத்து உரிமைகளையும் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, கட்சியின் தலைமை நிர்வாகிகள் 10 பேர் ராஜினாமா செய்வதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.