சென்னை

மிழகத்தில் பழுதடந்துள்ள 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றம் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று தமிழக மின்வாரிய அதிகாரிகள் செய்தியாளர்களிடம்,

 ”தமிழகம் முழுவதும் 2லட்சத்து 25 ஆயிரத்து 632 மீட்டர்கள் பழுதடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுதடைந்த மீட்டர்களால் துல்லியமான மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடிவதில்லை. எனவே மின்வாரியத்துக்கு வருவாய் இழப்புஏற்படுவதுடன், நுகர்வோருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.,

 பழுதடைந்த மீட்டர் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைவிட அதிகமாக ரீடிங் காண்பித்தால் அதற்கான கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த நேரிடுடுவதால் அவர்களுக்கு நிதிச் சுமை ஏற்படும்.  எனவே பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் சென்னை தெற்கு வட்டத்தில் மிகஅதிகபட்சமாக 36 ஆயிரத்து343 மீட்டர்களும், குறைந்தபட்சமாக கரூர் வட்டத்தில் 3,400 மீட்டர்களும் பழுதடைந்துள்ளன.  மேலும் சென்னை வடக்கு கோட்டத்தில் 22,093 மீட்டர்களும், கோவைவட்டத்தில் 7,089, ஈரோடு வட்டத்தில் 6,535, மதுரை வட்டத்தில் 23,023, திருச்சி வட்டத்தில் 22,880, திருநெல்வேலி வட்டத்தில் 27,716, வேலூர் வட்டத்தில் 25,463, விழுப்புரம்வட்டத்தில் 19,299, திருவண்ணாமலை வட்டத்தில் 12,465, தஞ்சாவூர் வட்டத்தில் 19,326மீட்டர்களும் பழுதடைந்துள்ளன.

மின் வாரியத்தில் எதிர்காலத்தில் மீட்டர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க 20 லட்சம் மீட்டர்களை கொள்முதல் செய்ய அண்மையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.”

என்று தெரிவித்தனர்.