முதலமைச்சர் ஸ்டாலின் நடித்த திரைப்படங்கள்….!

Must read

திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு” நாடகத்தில் தான் ஸ்டாலின் முதன் முதலாக நடித்தார்.

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என திராவிட கொள்கை பரப்பு நாடகங்களில் நடித்துள்ளார்.

மேலும் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி சீரியலிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என 2 திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

1998ல் மு.கருணாநிதி வசனத்தில் உருவான ‘ஒரே ரத்தம்’ படத்தில் மத பாகுபாடுகளுக்கு எதிரான சமுதாய புரட்சி பேசுகிற கதாபாத்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடும் புரட்சி கதாபாத்திரமான நந்தகுமார் எனும் பாத்திரத்தில் ஸ்டாலின் நடித்திருந்தார்.

இதே ஆண்டு விஜயகாந்த், ரேகா நடிப்பில் உருவான ‘மக்கள் ஆணையிட்டால்’ படத்தில் ஸ்டாலின் ‘ஆற அமர கொஞ்சம் யோசித்து பாருங்கள்’ என பாடுவது போல் நடித்திருக்கும் இந்த பாடல் இன்றும் திமுக பிரச்சார பாடல்கள் டாப் ட்ரெண்டிங்.

இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எழுத்தில் உருவான குறிஞ்சி மலர் கதையை தூர் தர்ஷனில் சீரியலாக இயக்கியபோது அதில் வரும் அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களில் அரவிந்தன் கேரக்டரில் ஸ்டாலின் நடித்துள்ளார்.

 

More articles

Latest article