கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் விஜய் டிவியில் வெளியான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் .

விஜய் டிவியில் வெளிவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ள ஆஜீத் இரு தினங்களுக்கு முன்பு நோய் அறிகுறிகள் தென்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.