டில்லி

த்திய அமைச்சர் நித்தியானந்த ராய் குடியுரிமை சட்டம் எப்போது அமலாகும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.  இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாத இந்து, பவுத்தம் பாரிசி, கிறித்துவ மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  பல மாநிலங்களில் நடந்த போராட்டத்தால் இந்த சட்டம் அமலாக்கம் செய்யப்படாமல் உள்ளது.  தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால  கூட்டத்தொடரில் இந்த சட்டம் அமலாக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.  அந்த பதிலில் அவர், ”அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வரை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகளை வகுக்க மத்திய உள்துறை அமைச்சகம் அவகாசம் கேட்டுள்ளது.   எனவே இந்த சட்டம் அமல்படுத்துவது தாமதமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.