கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….

Must read

பெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று முற்பகல் பதவி ஏற்றார். அவருக்கு மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்  பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

கர்நாடக முதல்வராக பதவி வகித்து வந்த எடியூரப்பாக ராஜினாமாவைத் தொடர்ந்து, மாநில பாஜக சட்டமன்ற கட்சித்தலைவராக பசவராஜ் பொம்மை நேற்று இரவு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டம் பாஜக மேலிடத்தலைவர்கsன  மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கிஷண் ரெட்டி, மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் நேற்று இரவு கேபிடல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதில், பாஜக சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக பசவராஜ் பொம்மை (வயது 61) ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக கூட்டத்தில் பசவாராஜ் பொம்மை  பெயரை எடியூரப்பா முன்மொழிந்தார். அதனை மற்றொரு எம்எல்ஏவான கோவிந்த் கார்ஜோள் வழிமொழிந்தார். அதன்படி, பாஜக சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகை சென்ற பசவராஜ் பொம்மை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து,  பாஜகவின் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

அதைதொடர்ந்து கர்நாடகத்தின் 20-ஆவது முதல்வராக பசவராஜ் பொம்மை  இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்றார்.  அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

More articles

Latest article